Posts

Showing posts from December, 2021

எஸ்.பி.பாலசுப்ரமணியன்.நிலா அது வானத்து மேல

Image
எஸ்.பி.பாலசுப்ரமணியன். நிலா அது வானத்து மேல குன்வர் எழுபது.. எண்பது.. தொண்ணூறு.. இரண்டாயிரம்.. இரண்டாயிரத்து பத்து.. இரண்டாயிரத்து இருபது முடிய தொடர்ச்சியான தலைமுறைகளை ஈர்த்த ஒரு குரல்... எண்பதுகளில் அவரைப் போல பாடிவிட மாட்டோமா? என்று இளைஞரெல்லாம் நினைப்பது உண்டு.நானும்தான்!. பாடிப் பார்க்காமலே எனக்கு நம்பிக்கை இருந்தது.என்னுடைய தம்பி செபுலோன் எட்டு வயதிலேயே எங்கெங்கு பாட்டுப் போட்டி நடக்கிறதோ?அந்த தெருவில் போய் பாடி பரிசு பெற்று வந்து விடுவான். இலேசாக பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.என் தம்பி என்னை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தான்.அண்ணே உனக்கு SPB வாய்ஸ் ஒத்து வராது.பழைய பாடல்களை ட்ரை பண்ணு என்று சொல்லி வெறுப்பேற்றினான்.அதற்கேற்றாற் போல் பலரும் ...பெண்கள் உட்பட அவனை பாடச்சொல்லி ரசிப்பார்கள்.எனக்கோ நாம் முழுமையாக பாடவில்லை.நாம் பாடினால்தான் நம் திறமை பற்றி அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்.சிறப்பாக எஸ்.பி.பி குரலில் பாடி அனைவரும் பாராட்டுவதாக கற்பனை செய்து கொண்டேன்.நாட்கள் நகர்ந்தது என் தம்பி திறமைகள் கூடிக்கொண்டே சென்றது.பள்ளிகளில் பரிசு.. பள்ளிகளுக்கு இடையேயான போட்ட...