எஸ்.பி.பாலசுப்ரமணியன்.நிலா அது வானத்து மேல
எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
நிலா அது வானத்து மேல
குன்வர்
எழுபது.. எண்பது.. தொண்ணூறு.. இரண்டாயிரம்.. இரண்டாயிரத்து பத்து.. இரண்டாயிரத்து இருபது முடிய தொடர்ச்சியான தலைமுறைகளை ஈர்த்த ஒரு குரல்...
எண்பதுகளில் அவரைப் போல பாடிவிட மாட்டோமா? என்று இளைஞரெல்லாம் நினைப்பது உண்டு.நானும்தான்!. பாடிப் பார்க்காமலே எனக்கு நம்பிக்கை இருந்தது.என்னுடைய தம்பி செபுலோன் எட்டு வயதிலேயே எங்கெங்கு பாட்டுப் போட்டி நடக்கிறதோ?அந்த தெருவில் போய் பாடி பரிசு பெற்று வந்து விடுவான். இலேசாக பாடல்களை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.என் தம்பி என்னை வித்தியாசமாக பார்க்க ஆரம்பித்தான்.அண்ணே உனக்கு SPB வாய்ஸ் ஒத்து வராது.பழைய பாடல்களை ட்ரை பண்ணு என்று சொல்லி வெறுப்பேற்றினான்.அதற்கேற்றாற் போல் பலரும் ...பெண்கள் உட்பட அவனை பாடச்சொல்லி ரசிப்பார்கள்.எனக்கோ நாம் முழுமையாக பாடவில்லை.நாம் பாடினால்தான் நம் திறமை பற்றி அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன்.சிறப்பாக எஸ்.பி.பி குரலில் பாடி அனைவரும் பாராட்டுவதாக கற்பனை செய்து கொண்டேன்.நாட்கள் நகர்ந்தது என் தம்பி திறமைகள் கூடிக்கொண்டே சென்றது.பள்ளிகளில் பரிசு.. பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பரிசு என வளர்ந்து கொண்டே இருந்தான்.சுரங்களை எழுதி வைத்து சரியாக பாடினான்.இசையை தேடி ஓடினான்.நான் மட்டும் வெறும் நம்பிக்கையில் இருந்தேன்.அவ்வப்போது என் பாடலுக்கு பலரும் கைதட்டி பாராட்டுவதாக கற்பனை செய்து கொண்டேன்.இது நீடிக்கவில்லை.என்னை நானே சோதித்து கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்று முடிவுக்கு வந்தேன்.ஒரு நல்ல இடம் கிடைக்க வேண்டும்.யாரும் இல்லாத தனிமையான இடம்தான் சிறந்தது.சோதனையில் வெற்றி பெற்ற பின்னர் நேரடியாக மேடைகளில் கலக்க வேண்டியதுதான் என்று நினைத்தேன்.நிறைய தேடலுக்கு பின் கருவ மரங்கள் நிறைந்த தண்ணீரற்ற ஏரி சிறப்பென பட்டது.இடம் கிடைத்து விட்டது.நாளும் குறித்தாயிற்று.சுற்று..முற்றும் யாரும் இருக்கிறார்களா? பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.யாருமில்லை.ஓரிடத்தில் மரத்தினடியில் வசதியாக அமர்ந்து கொண்டேன்.தொண்டையை சரி செய்து கருவ காட்டில் வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் ஆரம்பித்தேன்.சுதி சரியிருப்பதாக தெரியவில்லை.இன்னும் கொஞ்சம் உச்சத்தில் தொடங்க வேண்டுமோ?என் நினைத்து உச்சத்தில் ஆரம்பித்தேன்.வானுயர்ந்த சோலையிலே..நீ நடந்த வந்து ..பாதையெல்லாம் ...ம் முடியல.திணறியது.வானுயர்ந்த..சோலையிலே...நீநடந்த..கட்பண்ணி.. கட்பண்ணி பாடிப் பாத்தேன்.ஒன்னும் சரிப்படல.மறுபடி உச்சத்தில் தொடங்கினேன் வானுயர்ந்த... அங்கே எழும்பிய திடீர் குரல் முட்டுக்கட்டை போட்டது.ந்தா..ந்தா..சனியனே அங்கிட்டு போவாதன்னா கேக்க மாட்டங்கற..மாட்டுக்கார பெண்ணின் குரல்.மாடுகளைமேய்த்துக் கொண்டு என்னை கடந்து கொண்டிருந்தாள்.அன்னிக்கோட முயற்சி முடிந்தது.நம்மால முடியும்.ஆனா நமக்கெதுக்கு என்று எனக்குள் பேசிக் கொண்டேன்.
தொடரும்.....
Comments
Post a Comment